விழிகளில் துளிகள் பிரியுமோ? விழிகளில் துளிகள் பிரியுமோ? முன்னோட்டம் கண்களின் ஓரம் துளிர்த்துவிட்ட கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்ட வடிவுக்கரசி மறுபடியும் மனதிற்குள் கூறிக்கொண்டாள். நான் அழுவதைப் பார்த்துவிட்டால் அப்புறம் பாண்டிச்சேரிக்குப் போகவே மாட்டேன் என்று கூறிவிடுவான் சோமேஸ்வரன். அப்புறம் அவன் படிப்பு என்னாவது? பாசம் இருந்தால் மட்டும் போதுமா?