மூன்றாவது கண்: 1. ருத்ர முகம் மூன்றாவது கண் - 1. ருத்ர முகம்: முன்னோட்டம் இன்று காலை பத்துமணிக்கு ஏற்பாடு செய்திருக்கும் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றும் புதியதல்ல. தன்னுடைய மெய்க்காப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் இது ஆபத்தானது என்று எச்சரிப்பதும் பல்வேறுவிதமான முன்னேற்பாடுகளை கவனமாக செய்வதும் அதன்பிறகு ஒன்றுமே நிகழாமல் பத்திரமாக திரும்பி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.