இதயமேந்திக் கேட்கின்றேன் – முன்னோட்டம்

இந்தப் பதிவு இதயமேந்திக் கேட்கின்றேன் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 1 ஆவது பதிவு

மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது.

இதயமேந்திக் கேட்கின்றேன் – அத்தியாயம் ஒன்று

இந்தப் பதிவு இதயமேந்திக் கேட்கின்றேன் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

விடியற்காலையிலேயே பரபரப்பாகிவிடும் கோவையின் ஆர்.எஸ். புரத்தின் டி.வி. சாமி தெருவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்தச் சின்ன பங்களா அமைதியாகத் தெரிந்தது. கோவையின் ஆர்.எஸ். புரம் ஒரு வணிகர் வீதி என்பதால் அதிகாலையிலேயே முழித்துக்கொண்டு நாயர் கடைகளும் பால் வழங்கு நிலையங்களுமாக பரபரப்புடன் இருந்தது. ஆர்.எஸ். புரத்தில் வீற்றிருக்கும் பல பணக்கார முதலைகளின் இல்லங்களாக விரிந்துகிடக்கும் ஒவ்வொரு தெருக்களும் காலைநேர அலுப்பில் மூழ்கிக்கிடந்தது.