ஹாரி பாட்டர் மற்றும் மந்திரக்கல் – அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன்

இந்தப் பதிவு ஹாரி பாட்டர் மற்றும் மந்திரக்கல் தொடரிலுள்ள 1 பதிவுகளில் 1 ஆவது பதிவு

நான்காம் எண், பிரைவட் டிரைவில் குடியிருக்கும் திரு மற்றும் திருமதி டர்ஸ்லிக்கு தாங்கள் எதிலும் சாதாரணமானவர்கள் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை. வித்தியாசமான, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்களாக அவர்களை நீங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் அத்தகைய விஷயங்களை அவர்கள் பொறுத்துக்கொள்வதில்லை.